பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

Update: 2023-04-28 12:55 GMT

காரைக்கால்

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வரிச்சிக்குடியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 28). எலக்ட்ரீசியன். நேற்று காந்திநகரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

காந்திநகர் சமுதாய கூடம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் நின்றிருந்த கார் மீது மோதியது. இதைத்தொடர்ந்து, கார் உரிமையாளரான ஸ்டாலினிடம் (45), காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தருவதாக சிவபாலன் ஒப்புக்கொண்டார். ஆனால் அதன்படி சிவபாலன் செய்து தரவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக சிவபாலனுக்கும், ஸ்டாலினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை சிவபாலனின் தாயார் தடுக்க முயன்றார். அப்போது அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்டாலின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்