காரைக்கால் கடற்கரையில் கலைவிழா
வை நடத்தின. புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முரசு கொட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
காரைக்கால்
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை, தென்னக பண்பாட்டு நடுவம், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து காரைக்கால் கடற்கரையில் கலைவிழாவை நடத்தின. புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முரசு கொட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கலைஞர்களும், உள்ளூர் கலைஞர்களும் இணைந்து புதுமையான கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீணை இசை, வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதனை பொதுமக்கள் வெகுவாக கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், தென்னக பண்பாட்டு மைய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திடலிலும் கலை விழா நடந்தது.