கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

புதுவை குருமாம்பேட் பகுதி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

Update: 2023-06-09 16:47 GMT

புதுச்சேரி

புதுவை குருமாம்பேட் வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் திருப்பூர் உடுமலைப்பேட்டை ஏரிபாளையத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 26), ராமநாதபுரம் கடலாடி மங்கலம் பகுதியை சேர்ந்த கருணைநாதன் (38) ஆகியோர் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 4-ந் தேதி குடிபோதையில் ராம்குமாருக்கும், கருணைநாதனுக்கும் ஏற்பட்ட தகராறில் ராம்குமார் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கருணைநாதனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஊசுட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த கருணைநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இன்று அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்