போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-12 18:52 GMT

புதுச்சேரி

முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய கட்டிட தொழிலாளிக்கு 12 வயது மகள் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கட்டிட தொழிலாளி தனது மகள் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக தெரிகிறது. பெற்ற மகள் என்றும் பாராமல் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்