தூக்குப்போட்டு பட்டதாரி தற்கொலை

புதுவை நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2023-05-29 16:06 GMT

புதுச்சேரி

புதுவை நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 48). டிரைவர். அவரது மகன் சார்லஸ் (22). பி.காம். படித்து விட்டு நண்பருடன் சேர்ந்து சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று சார்லஸ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை ஆரோக்கியராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சார்லஸ் வீட்டின் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்