மேற்கு வங்காள இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Update: 2024-11-23 07:59 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

தற்போதைய நிலவரப்படி போட்டியிட்ட 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் உள்ள 3 தொகுதிகளிலும் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்த தேர்தல் மாநிலத்தை ஆளும் கட்சிக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கால் மாநிலத்தில் பெறும் சர்ச்சையான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே இந்த இடைத்தேர்தல் நடந்ததால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்