உ.பி.யில் மனைவியை தாக்கி, காதை அறுத்த கணவர் கைது

உ.பி.யில் மனைவியின் காதை அறுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-08-07 22:59 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் பட்காவ்லி கிராமத்தின் தலைவராக உள்ளார். இவரது கணவர் பல்ராம் மீது சுமார் 14 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்ராம் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென ஸ்ரீதேவியை தாக்கிய அவர், அரிவாளால் அவரது காதை அறுத்துள்ளார். தொடர்ந்து அவரை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஸ்ரீதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பல்ராமை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்