இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேச நபர் கைது

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-12-08 11:24 GMT

கவுகாத்தி,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காளதேசத்தில் இருந்து இன்று அசாம் மாநில எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய ஒருவர் முயற்சித்துள்ளார். அந்த நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பது உறுதியானது. இதையடுத்து, அந்த நபரை வங்காளதேசத்திற்கே திருப்பி அனுப்பினர்.   

Tags:    

மேலும் செய்திகள்