விண்வெளி தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள்..எங்கே படிக்கலாம்? முழு விவரம்
இந்திய வான்வழி ஆராய்ச்சியில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்காக இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அமைப்பு உருவாக்கப்பட்டது.
"இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி" என்னும் அமைப்பு கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கிவருகிறது. இதனை'IIST'என்றும் அழைப்பார்கள். இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகமாகும்.
இந்திய வான்வழி ஆராய்ச்சியில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்காகவும், உலகிலேயே மிகச்சிறந்த அறிவியல் அமைப்புகளை உருவாக்கவும், இந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர்14 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பட்டப்படிப்புகள்
இங்கு நடத்தப்படும் பட்டப்படிப்புகள் பற்றிய விவரம் :
1. பி .டெக் இன் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்; இந்த படிப்பு வான்வெளி தொழில் நுட்பத்தையும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தையும் உள்ளடக்கிய படிப்பு ஆகும்.இந்த படிப்பில் -மெக்கானிக்கல் டிசைன் மெனு பாக்சரிங் சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் டைனமிக்ஸ் ஆகிய முக்கிய பாடங்கள் இடம் பெறுகின்றன.மேலும், பிளைட் மெக்கானிக்ஸ், ஏரோடைனமிக்ஸ் ,தெர்மல் அண்ட்ப் ரொப்பல்சன் ,ஸ்ட்ரக்சர் அண்ட் டிசைன் மற்றும் மேனு பாக்சரிங் சயின்ஸ் , ஆகிய சிறப்பு பாடங்களும் இந்த படிப்பில் இடம் பெறுகின்றன
2.பி.டெக்.இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ஏவியானிக்ஸ்)
இந்தப்படிப்பில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் இடம் பெறுகின்றன. மேலும் ஏவியானிக்ஸ் என்னும் சிறப்பு பாடமும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் வான்வெளி சம்பந்தப்பட்ட அமைப்புகளின் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பாடங்கள் இடம்பெறும்.
இந்த படிப்பில் டிஜிட்டல் சிக்னல் ப்ராசசிங், ஆர்.எப் அண்ட் மைக்ரோவேவ் கம்யூனிகேஷன், ஆன்டனா ,பவர் எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோடிக்ஸ் போன்ற பாடங்களும் இடம்பெறுவதால் இந்தத் துறைகளில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக பலவாய்ப்புகளும் உள்ளன.
3. டூயல் டிகிரி (பி.டெக்.இன்இன்ஜினியரிங்பிசிக்ஸ்,மாஸ்டர்ஆப்சயின்ஸ்/ எம்டெக் -கீழ்க்கண்ட ஏதேனும் ஒருபடிப்பில்..
*மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் அஸ்ட்ரானமி அண்டு ஆஸ்ட்ரோ (பிசிக்ஸ்
*மாஸ்டர்ஆஃப்சயின்ஸ்இன்சாலிட்ஸ்டேட்பிசிக்ஸ்(
*எம்.டெக் இன் எர்த்சி ஸ்டம் சயின்ஸ்
எம்.டெக் இன் ஆப்டிகல் இன்ஜினியரிங்
இந்த படிப்பில் இயற்பியல் கணிதம் மற்றும் பொறியியல் ஆகிய பாடங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் நடத்தப்படுகின்றன.
முதலாம் ஆண்டு டூயல் டிகிரி
படிப்பில் அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. பின்னர், இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிப்பில் இயற்பியல் மற்றும் பொறியியல் பாடத்தில் உள்ள அடிப்படை பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
நான்காம் வருட படிப்பில் பட்ட மேற்படிப்புக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. அதாவது-Master of Scienceஅல்லது M.Tech Degree படிப்புக்கான பாடங்கள் கற்றுத்தரப்படும்.
ஐந்தாவது ஆண்டு படிப்பில் முழுமையாக "ரிசர்ச் ப்ராஜெக்ட்" என்னும் ஆராய்ச்சி பயிற்சி வழங்கப்படும்.
பட்டமேற்படிப்புகள்
இங்கு நடத்தப்படும் பட்ட மேற்படிப்புகள் பற்றியவிபரங்கள்:
1.எம்.டெக் இன் தெர்மல் அண்ட் ப்ரொபைல்சன்
2.எம்.டெக் இன் ஏரோடைனமிக்ஸ் அண்ட் பிளைட் மெக்கானிக்ஸ்
3.எம்.டெக் இன்ஸ்ட்ரக்சஸ் அண்ட்டிசைன்
4. எம்.டெக் இன்ஆர். எப் அண்ட்மைக்ரோவேவ் இன்ஜினியரிங்
5.எம்.டெக் இன் டிஜிட்டல் சிக்னல் பிராசசிங்
6.எம்.டெக் இன் கண்ட்ரோல்சிஸ்டம்
7.எம்.டெக் இன் வி .எல். எஸ். ஐ அண்ட் மைக்ரோ சிஸ்டம்ஸ்
8.எம்.டெக் இன் பவர் எலக்ட்ரானிக்ஸ்
9. எம் .டெக் இன் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
10.எம்.டெக்இன் எர்த் சிஸ்டம்சயின்ஸ்
11.எம்.டெக் இன்ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்
12.மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் அஸ்ட்ரானமி அண்டு ஆஸ்ட்ரோபிசிக்ஸ்
13.எம் .டெக் இன்மிசின் லேர்னிங் அண்ட்கம்ப்யூட்டிங்
14 .எம்.டெக் இன் ஆப்டிகல் இன்ஜினியரிங்
15.எம்டெக் இன் குவாண்டம்டெக்னாலஜி
சிறந்தவேலைவாய்ப்புகள்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ்சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி என்னும் நிறுவனத்தில் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் படித்து முடித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பல்வேறு நிறுவனங்களில் உள்ளன.
குறிப்பாக கீழ்கண்ட நிறுவனங்களில் சிறந்த பணி வாய்ப்புகள் உள்ளது.
1.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம்
2. இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் பெங்களூரு
3. விண்வெளி விண்ணப்ப மையம் அகமதாபாத்
4. சதீஷ் தீவான் ஸ்பேஸ் சென்டர், ஷார்
5. திரவ உற்பத்தி அமைப்பு மையம், திருவனந்தபுரம், பெங்களூர் மற்றும்
மகேந்திரகிரி
6. தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL)
7. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
இந்த நிறுவனங்கள் தவிர "டிசைன்அண்ட் டெவலப் மெணட் ஆப் மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ்" மற்றும் "டெவெலப் மென்ட ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றோடு தொடர்புடைய நிறுவனங்களிலும் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு முகவரி
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
வலியமலை (P.O.), திருவனந்தபுரம்-695 547.
கேரளா, இந்தியா.
இணையதளம்: www.iist.ac.in
இவை தவிர,ugadmission@iist.ac.inஎன்னும் இமெயில் முகவரியிலும் இந்தப் படிப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்