கர்நாடக தேர்தல்: வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்...!

அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2023-04-23 12:06 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

அதேவேளை, கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரையடுத்து, அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் காந்திநகர் தொகுதியில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்ததற்கு விளக்கம் கேட்டு குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் குமார் தனது வேட்புமனுவையே வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்