தகுதிச்சான்று புதுப்பிக்காத 3 வாகனங்கள் பறிமுதல்

Update: 2023-08-03 18:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் வல்வில் ஓரிவிழாவையொட்டி சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையின் போது தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் செல்போன் பேசிய படியும், ஹெல்மெட் அணியாமலும் மோட்டார் சைக்கிளில் சென்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது பல்வேறு விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்ற 4 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்