போக்குவரத்து போலீசாருக்கு நவீன விசிறி

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் சேலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு நவீன விசிறியை கமிஷனர் விஜயகுமாரி வழங்கினார்.

Update: 2023-05-11 20:38 GMT

சேலம் மாநகரில் போக்குவரத்து பிரிவில் ஏராளமான போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதியில் நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது கோடை வெயில் காலம் என்பதால் ஏற்கனவே தனியார் பங்களிப்புடன் கண் கண்ணாடி, மோர், தொப்பி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் 5 ரோடு சந்திப்பில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன விசிறியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வழங்கினார். இதனை போக்குவரத்து போலீசார் தங்களது கழுத்தில் மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு வியர்வை ஏற்படாமல் காற்று வீசும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, குணசேகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்