அனைவரும் ஒன்றே!

அனைத்து விதமான கலாசாரங்களையும் பண்பாடுகளையும் மதித்து நினைவுகொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ந் தேதி ‘சர்வதேச கலாசார ஒற்றுமை தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Update: 2022-09-11 01:30 GMT

உலகம் முழுவதும் பல்வேறு விதமான பாரம்பரியம், கலாசாரம், பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கலாசாரத்துக்கும் தனித்துவம் உள்ளது. அதை உணர்ந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

அனைத்து விதமான கலாசாரங்களையும் பண்பாடுகளையும் மதித்து நினைவுகொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ந் தேதி 'சர்வதேச கலாசார ஒற்றுமை தினம்' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும், மொழி, மதம், இனம் வாரியாக அதன் கலாசார பண்புகள் வேறுபடுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக திகழும் நம் இந்திய நாடு பழம்பெரும் வரலாறும், பண்பாடும் கொண்டது.

நமது கலாசாரத்தைப் போன்று, மற்ற கலாசாரமும் மதிப்பு வாய்ந்ததுதான் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்க வேண்டும். இத்தகு சிறப்பு வாய்ந்த நாளில் நமக்குள்ளும், சமூகத்திலும் இருக்கும் பாகுபாடு மனப்பான்மையை முற்றிலும் அகற்ற வேண்டியது நம்முடைய கடமை. தொழில்நுட்ப வளர்ச்சியும், வலைத்தளத்தின் பயன்பாடும் அதிகமாக உள்ள இக்காலகட்டத்தில், அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை நமக்குள் மட்டுமில்லாமல், அடுத்த தலைமுறைக்கும் ஏற்படுத்த முயற்சிப்போம். 

Tags:    

மேலும் செய்திகள்