நடிகை ஷில்பா ஷெட்டி மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடிகை ஷில்பா ஷெட்டி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-11-21 12:22 GMT

ஜெய்ப்பூர்,

கடந்த 2013-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி, பட்டியல் சமூகத்தினரை இழிவு செய்யும் வகையிலான வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது அசோக் பன்வார் என்பது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்ப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது ஷில்பா ஷெட்டி தரப்பில், 2013-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி தொடர்பாக, சுமார் 3 ஆண்டுகள் கழித்து 2017-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகை ஷில்பா ஷெட்டி சாதி ரீதியான உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தையை பேசவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்று, நடிகை ஷில்பா ஷெட்டி மீதான வழக்கை ரத்து செய்து ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்