நேட்டோ பாதுகாப்பு கூட்டணியில் சேர்ந்து பாதுகாப்பு... ... #லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா
நேட்டோ பாதுகாப்பு கூட்டணியில் சேர்ந்து பாதுகாப்பு தேடும் உக்ரைனின் முயற்சிக்கு எதிராக ரஷியா அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் போர் 100 நாட்களைத்தாண்டி தொடர்கிறது.
இந்தப் போரில், அந்த நாட்டின் 20 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. டான்பாஸ் பகுதியில் வான்தாக்குதல்களை ரஷிய படையினர் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Update: 2022-06-04 20:33 GMT