ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: காங்கிரஸ் தேசிய... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு நேர்மையான மற்றும் தைரியமான தலைவர், அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார், உறுதியான அர்ப்பணிப்புடன் தமிழக மக்களுக்கு சேவை செய்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று அதில் கார்கே பதிவிட்டுள்ளார்.
Update: 2024-12-14 06:53 GMT