இந்தியாவின் ‘குண்டு பையன்’-‘பாகுபலி’ இந்தியாவின்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

இந்தியாவின் ‘குண்டு பையன்’-‘பாகுபலி’

இந்தியாவின் ‘குண்டு பையன்’ மற்றும் ‘பாகுபலி ராக்கெட்’ என்ற செல்லப்பெயர்களை கொண்ட அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக அனைத்து செயல்களும் நடந்து முடிந்துள்ளன.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் விண்ணில் பாயும் ராக்கெட் 4 டன் எடையை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு இது எடுத்துச் செல்லும். பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 6 டன்னுக்கும் அதிகமான எடையை எடுத்துச் செல்ல முடியும்.

இப்போது ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி உலாவும் வகையிலான விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. அதேபோல, கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை பாடமாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்ததும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

Update: 2023-08-24 00:00 GMT

Linked news