‘அசோக சக்கரம்’ நிலவின் தென் துருவத்தின்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

‘அசோக சக்கரம்’

நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ‘பிரக்யான் ரோவர்’ என்ற 6 சக்கர ரோபோ வாகனத்தின் சக்கரங்களில் இந்தியாவின் அசோக சக்கரமும், ‘இஸ்ரோ’வின் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தன.

இந்த ரோபோ வாகனம் நிலவின் ஒவ்வொரு பகுதியாக சுற்றி வரும்போது, இந்த 2 சின்னங்களும் நிலவின் மேற்பரப்பில் பதிக்கப்படும். இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடான இந்தியா, அங்கு தனது சின்னத்தையும் பொறித்து வரலாற்று சாதனை படைக்கிறது.

இதில் உள்ள ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும். இதன் மூலம் நிலவில் சேகரிக்கப்படும் தரவுகளை பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் நாட்களில் வழங்கும்.

Update: 2023-08-23 23:55 GMT

Linked news