நிலவில் மனிதன் விண்வெளி ஆராய்ச்சியில் கொடி... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

நிலவில் மனிதன்

விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடை போட வைத்தது. அந்த அமெரிக்கா கூட நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் நிலவில் தென் துருவத்தில் இறங்க செய்ததில்லை.

ஆர்வக்கோளாறால் ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவுக்கு முன்பாக நிலவின் தென் பகுதியில் நாம் இறங்கிவிட வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு லூனா என்ற விண்கலத்தை தயாரித்து அவசரம் அவசரமாக நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதற்கு விபரீத முடிவு தான் ஏற்பட்டது. ஆனால் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த லேண்டர் நிலவில் கால் பதித்தது இந்தியாவுக்கு மட்டும் இல்லை.

இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல. பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச் செய்வதற்கும் கூட சந்திரயான்-3 ன் ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

Update: 2023-08-23 23:12 GMT

Linked news