சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு நிலவில் தடம் பதித்த 4-வது நாடானது இந்தியா

புதுடெல்லி,

‘சந்திரயான்-3’ன் மூலம், நிலவில் தடம் பதித்த 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்திருக்கிறது.

இந்தியாவுக்கு முன்பு நிலவு மண்ணை முத்தமிட்ட 3 நாடுகள், ரஷியாவை உள்ளடக்கிய முந்தைய சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகும்.

சோவியத் ஒன்றியம்

ஆனால் சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் கூட நிலவில் தங்கள் முதல் முயற்சியில் வெற்றிபெறவில்லை. சோவியத் ஒன்றியம் தனது 6-வது முயற்சியில்தான் நிலவுப் பரப்பை தொட்டது.

அதன் ‘லூனா-2’ விண்கலம், 1959-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி நிலவில் மோதி நொறுங்கியது. ஆனால் பூமிக்கு வெளியே வேறு ஒரு கோளில் மோதிய, மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக அது ஆனது.

அமெரிக்கா

அதேபோல அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, 13 தோல்விகரமான முயற்சிகளுக்குப் பின், 1964 ஜூலை 31 அன்று நிலவில் வெற்றியை ருசித்தது.

சீனா

சோவியத் ஒன்றியம், அமெரிக்காவை தொடர்ந்து, நிலவை நோக்கிய தனது ‘சாங் இ’ திட்டத்தை சீனா தொடங்கியது. அதன் ‘சாங் இ-3’ விண்கலம், 2013-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி முதல்முறையாக நிலவு பரப்பைத் தொட்டது. அந்த வரிசையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஏவப்பட்ட ‘சாங் இ-5’ விண்கலம், அந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி நிலவில் தரையிறங்கி, அதே மாதத்தின் 16-ந் தேதி 2 கிலோ நிலவு மண்ணை பூமிக்கு கொண்டு வந்தது.

இந்தியா

கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி ‘சந்திரயான்-1’ ஏவல் மூலம் தனது நிலவு ஆராய்ச்சி பயணத்தை தொடங்கிய இந்தியா, தற்போது ‘சந்திரயான்-3’ மூலம் வெற்றிகரமாக சந்திரனில் தடம் பதித்திருக்கிறது. ஆனால் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சீனாவின் நிலவு முயற்சிகளுக்கு இல்லாத சிறப்பு, இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியில் ‘சந்திரயான்-3’ லேண்டர் தரையிறங்கி ஆராய்வதுதான்.

Update: 2023-08-23 20:04 GMT

Linked news