நிலவின் தரையை தொட்டது பிரக்யான் ரோவர்..!!நிலவின்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

நிலவின் தரையை தொட்டது பிரக்யான் ரோவர்..!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது.

விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்த பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதூர்யமாக நடத்தி முடித்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

விக்ரம் லேண்டர் தரையிறங்கியபின் இந்த திட்டத்தின் அடுத்த பணியான பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப்பகுதியில் இருந்த இந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறியது. இது விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

இரவு சுமார் 10 மணிக்கு விக்ரம் லேண்டரின் பக்கவாட்டில் இருந்த சாய்தள கதவு திறக்கப்பட்டது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அங்குலமாக ஊர்ந்து நிலவில் தனது முதல் அடியை பிரக்யான் ரோவர் எடுத்து வைத்தது.

தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின்பு பிரக்யான் ரோவர் நிலவின் தரையை தொட்டுள்ளது.

இதன்படி சந்திரயான் - 3யின் அடுத்தகட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்த ரோவர், அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-08-23 19:46 GMT

Linked news