ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும்... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அ.தி.மு.க.வில் விரிசலை ஏற்படுத்தி இருக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் கடந்த 20-ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘இப்போதுள்ள அசாதாரண சூழலை கருதி 23-ந்தேதி (நாளை) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதம் ஓ.பன்னீர்செல்வம் எழுதியது போலவே 3 பக்கங்களை கொண்டதாகும். இந்த கடிதம் உடனடியாக கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கடிதத்தில் உள்ள தகவல் குறித்து ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தவேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-06-22 03:45 GMT

Linked news