கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பவுத்திரம், காந்தி கிராமம், க.பரமத்தி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் திமுகவினர் எதிர்ப்பால் 10 இடங்களில் இன்னும் சோதனை நடத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.