கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டின் மீதும் போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அமைச்சரவை இட ஒதுக்கீடு முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஷிமோகாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.