புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.