சென்னை,
அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று ) காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட போஸ்டர்கள் வழிமறித்து எரிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு ஆதரவாக கொண்டு செல்லப்பட்ட பேனர்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.