கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-11-29 14:22 GMT

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கடந்த சில மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. துரைப்பாக்கம் செல்லும் சாலையில் வாகன நெரிசலால் பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்