கனமழை: நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
நாகை,
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.