சென்னையை குளிர்வித்த ஆடி மழை!

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2023-08-10 10:13 GMT

சென்னை,

சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சென்டிரல், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,  ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர்,வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்தது. மேக மூட்டத்துடன் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்