குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிய கதியில் நடைபெற்று வருகிறது என டிஎன்பிஎஸ் சி விளக்கம் அளித்துள்ளது.