டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். கோவையில் இருந்து பிற்பகல் 3.20 மணியளவில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்தார். அமித்ஷா இல்லத்தில் நடைபெறும் சந்திப்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் உடன் இருந்தார்.அமித்ஷா உடனான சந்திப்பில் அதிமுக தரப்பில் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது.