எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே: ஓபிஎஸ் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓ பன்னீர் செல்வம், எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே" என்று பதில் அளித்து விட்டு சென்றார்.

Update: 2023-02-03 13:54 GMT

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர். ஆனால் குறைந்த கால அவசாசமே உள்ளதால் பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓ பன்னீர் செல்வம், எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே" என்று பதில் அளித்து விட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்