ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியில் திருப்தி ஏற்படும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.