கன்னி - வார பலன்கள்

Update: 2023-06-29 20:01 GMT

உறுதி மிகுந்த உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

எடுத்த காரியத்தை முயற்சியுடன் செய்து பலனை அடைவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். அலுவலகக் கடன் கைக்கு வந்தடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் மூலம் அதிக வேலைகள் வந்துசேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் நன்றாக நடைபெற்று லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகத்தின் மூலம் பணவரவுகள் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணவரவும், புகழும் ஏற்படும். பங்குச் சந்தை திருப்பம் தரக்கூடியதாக அமையும்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்து வாருங்கள்.

மேலும் செய்திகள்