சாமர்த்தியமாகப் பேசும் கன்னி ராசி அன்பர்களே!
உங்களுக்கு வியாழக்கிழமை மாலை 4.37 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் நிதானம் தேவை. உங்கள் பெரும்பாலான செயல்களில் வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து பங்கு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகள் பாராட்டும் அளவுக்கு பணியாற்றுவீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடந்தேறும். சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். வரவேண்டிய பணம் தேடி வருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காணப்படும்.
குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்காகவும், கலை நிகழ்ச்சிக்காகவும் தாராளமாகச் செலவு செய்வீர்கள். கலைஞர்கள் புதிய திருப்பத்தை சந்திப்பார்கள்.
பாிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட்டால் சிரமங்கள் குறையும்.