உழைப்புக்கு அஞ்சாத மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!
சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இதுவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அலுவலகத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டியதில்லை. உங்களுக்கு தொல்லை தந்தவர்களே உங்களிடம் இருந்து வேறு இடத்திற்கு மாறுதலாகி செல்வார்கள். மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் கடுமையாக முயற்சி செய்ததன் பேரில் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள், புதிய தொழில் தொடங்குவது பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பார்கள்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வழக்கு விசாரணையில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம்:- முழுவதும் முருகப்பெருமானை வணங்கி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் தொல்லைகள் அகலும்.