உடல் ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, பதவி உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் திருப்தியடைவர். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இந்த வாரம் முழுவதும் ஸ்ரீராம ஜெயம் எழுதி, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.