சிந்தனையும், செயல்திறனும் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே!
பணிகளில் அதிக முயற்சியோடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உங்கள் பணிகளுக்கு தக்க நேரத்தில் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய பணி ஒன்றை சிறப்பாக முடித்துப் பாராட்டுப் பெறுவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபர்களின் பணிகளை உற்சாகமாகச் செய்து, சரியான காலத்தில் கொடுத்து மகிழ்வீர்கள். பணவரவு கிடைத்து குடும்பச் செலவுகளை சமாளிப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் பெறக்கூடும். குடும்பத்தில் மகிழ்வான சூழ்நிலை காணப்படும். அதிக வேலைகளால் பெண்களுக்கு ஆரோக்கியக் குறை ஏற்படலாம். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணமும், புகழும் சேரும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வணங்குங்கள்.