ரிஷபம் - வார பலன்கள்

Update: 2023-01-19 19:51 GMT

சிந்தனை வளம், ஆன்மிக ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

வெள்ளி முதல் சனிக்கிழமை பகல் 3.10 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், அனைத்து விஷயங்களிலும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் நன்றாக ஆலோசனை செய்த பின்னரே முடிவுகளை எடுக்க வேண்டும். அதன் மூலமே வெற்றி அடைய முடியும்.

குடும்ப விஷயங்களில் கணவன்- மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் தோன்றி மறையும். தொழில் துறையினர், எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதே நேரம் வருமானம் கைக்கு வந்து சேர கால தாமதம் ஆகும். கேளிக்கைகளில் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டிய நேரம் இது. அரசு வழியில் சில நன்மைகள் கிடைக்கும்.

இயந்திர பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனமாக செயல்படுங்கள். ெபண்கள், தங்கள் உடைமைகளை கவனமாக கையாளுங்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

மேலும் செய்திகள்