ரிஷபம் - வார பலன்கள்

Update: 2022-12-29 20:22 GMT

30.12.2022 முதல் 5.1.2023 வரை

வெற்றிபெறும் செயல்களில் முன்நிற்கும் ரிஷப ராசி அன்பர்களே!

செயல்களில் வெற்றியடைய சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டாலும் சிறுசிறு தடங்கல்களைத் தவிர்க்க இயலாது. உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவியும், சகப் பணியாளர்களின் அரவணைப்பும் இருக்கும். அலுவலகத்தில் கேட்ட கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள்.

சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக இருந்தாலும், பண வரவுக்காக அலைச்சலை சந்திப்பீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் தேவையை சரியான நேரத்தில் நிறைவேற்ற இயலாமல் போகலாம்.

குடும்பம் நன்றாக நடைபெற்றாலும் சிறு சிறு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். கலைஞர்களில் சிலருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கலாம். பங்குச்சந்தையில் லாபம் சுமாராக இருக்கும்.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை அங்காரக பகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

மேலும் செய்திகள்