தர்மம் செய்வதில் விருப்பம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
சில சிரமங்களைச் சந்திக்கும் சூழல் உருவாகும் வாரம் இது. இருந்தாலும் நற்பலன்களும் உங்களுக்கு நடைபெறத்தான் செய்யும். அனைத்து விஷயங்களிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நகைகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்க விரும்புபவர்கள், அனுபவம் உள்ளவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்.
வியாபாரம் நல்ல முறையில் நடந்து வரும். திரவியப் பொருட்கள், மளிகைப்பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையில் கூடுதலான ஆதாயம் பெற முடியும். சொந்த தொழிலை விடவும் கூட்டுத் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அடையலாம். பணியாளர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற கடுமையாக உழைப்பீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானை வணங்கினால் நன்மைகள் வந்தடையும்.