கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட மீன ராசி அன்பர்களே!
திங்கட்கிழமை பகல் 11.27 மணி முதல் புதன்கிழமை மாலை 4.40 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். நன்மைத் தரக்கூடிய அம்சங்கள் அதிகம் காணப்படுவதால் எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவார்கள். பணவரவும் தாராளமாக இருக்கும். இருப்பினும் உறவினர் வருகையும், சுபச்செலவுகளும் தொடர்ந்து வருவதால் சற்று இறுக்கமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கிய பாதிப்புகள் தோன்றும். கணவன் - மனைவி இடையே சிறு மனக்கசப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்களால் எதிர்பாராத நன்மையும், புதிய நண்பர்களால் ஆதாயமும் வந்துசேரும். மறைமுக விரோதிகள் தொல்லை தந்தாலும், பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது.
பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.