ஆன்மிகத்தில் அதிகப்பற்று கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
எதிர்பாராத தனலாபமும், பொருள் சேர்க்கையும் உண்டாகும். தகுந்த நபர்கள் இல்லாத காரணத்தால் சில காரியங்கள் நிறைவடையாமல் போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் அதிக கவனம் தேவை. உங்கள் சிறிய தவறும், உயர் அதிகாரிக்கு பெரியதாகத் தோன்றும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபரின் அறிமுகத்தைப் பெறுவர். அவரால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நிலுவை பணத்தை வசூலிக்க முயற்சிப்பர். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லை உருவாகும். பெண்கள் தங்கள் சிறு சேமிப்பால் அவற்றை சமாளிப்பார்கள். இல்லத்தில் சுபகாரியங்களை நடத்த முயற்சிப்பீர்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பர். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை ஹயக்ரீவருக்கு மலர் மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வணங்குங்கள்.