உற்சாகமாகச் செயல்களில் ஈடுபடும் சிம்ம ராசி அன்பர்களே!
திங்கள் முதல் புதன் காலை 8.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் அதிக கவனம் தேவை. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது நன்கு யோசித்து முடிவெடுங்கள். இருந்தபோதும், உங்கள் முயற்சியால் எதிரிகளை வெற்றி கொள்ளும் மனத்துணிவு ஏற்படும். உத்தியோகத்தில் மகிழ்வான சூழ்நிலை காணப்படும். உயரதிகாரிகளின் ஆதரவோடு அலுவலகத்தில் சில சலுகைகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பும், பணவரவுகளும் உண்டாகும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இல்லத்தில் பொலிவூட்டும் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற்று சுறுசுறுப்பாக செயல்படுவர். பங்குச்சந்தை சிறப்பாக நடைபெற்று லாபம் ஈட்டும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.