மிதுனம் - வார பலன்கள்

Update: 2023-06-01 19:46 GMT

சிந்தனை மிகு எழுத்தாற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

புதன் காலை 7.41 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பூமி சம்பந்தமான கடன் தொல்லைகள் மனக்கவலை தரும். உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும், அதில் இருந்து விடுபட வழி கொடுக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபட நண்பர்கள் உதவுவார்கள். கணினி தொடர்பான வேலை பார்ப்பவர்களுக்கு, பதவி உயர்வு தேடி வரும். அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு புதிய வீடு வாங்கும் எண்ணம் ஏற்படும். மறைமுக விரோதிகள் உங்களை அதிக சங்கடத்திற்கு ஆளாக்குவர். எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கையை நெய் தீபம் ஏற்றியும், மந்திர பாராயணம் செய்தும் வணங்குங்கள்.

மேலும் செய்திகள்