உறுதியான உள்ளம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
இந்த வாரம் பல நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இருப்பினும் சனிக்கிழமை மதியம் 3.10 மணி முதல் திங்கள் மாலை 5.34 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், யாரிடமும் முக்கியமான விஷயங்களை வெளிப்படையாகப் பேச வேண்டாம். அனைவரிடமும் அளவாகப் பேசுவது நல்லது. யாருக்கும் எவ்விதமான வாக்குறுதியும் அளிக்காமல் தவிர்ப்பது அவசியம்.
பணத் தட்டுப்பாடு உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. அதனால், செலவுகளை சமாளிக்க திட்டமிட்டு சிக்கனமாக செயல்பட வேண்டும். நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் உதவி கேட்டு தொல்லை தந்தாலும், அவர்களை பகைத்துக் கொள்ளாமல் பக்குவமாக சமாளிக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, அங்காரகனுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும்.