மிதுனம் - வார பலன்கள்

Update: 2023-01-05 20:11 GMT

உயர்வான எண்ணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகஸ்தர்கள், இடமாற்றம், பதவி உயர்வுக்காக முயற்சிக்க வேண்டாம். அன்றாடப் பணிகளை சிறப்பாக செய்து, உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றாலே பதவி உயர்வு தானாக உங்களை வந்தடையும். தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைத்தாலும், அதற்கான வருமானம் கிடைக்காது.

வியாபாரிகளுக்கு மிகவும் சோதனையான காலம் இது. எனவே பொறுமையாக இருங்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகளும், வருவாயும் குறைந்து மனச்சோர்வை ஏற்படுத்தும்.

குடும்பத்தில் தோன்றும் பிரச்சினைகளை, பெண்கள் பொறுமையாக கையாளுங்கள். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது சிறுசிறு சச்சரவுகள் தலைகாட்டத்தான் செய்யும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவதில் நிதானம் தேவை.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கினால் இன்னல்கள் விலகும்.

மேலும் செய்திகள்