நண்பர்களிடம் பாசத்தோடு பழகும் மிதுன ராசி அன்பர்களே!
திட்டமிட்ட காரியங்களில் தீவிர முயற்சியுடன் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, விரும்பிய இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் உள்ளவர்கள் பற்றி வீண் பேச்சுகளில் ஈடுபட்டால், உயரதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், அவர்களால் அதிக வருமானமும் கிடைக்கக்கூடும். கூட்டுத்தொழிலில் லாபம் பெறுவீர்கள். பங்குச்சந்தையில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் கூடும். என்றாலும் பொருள் வரவை கவனமாக பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்பட்டாலும், பெண்கள் சாமர்த்தியமாக அதை சமாளிப்பார்கள். தாய்வழி உறவில் எதிர்பாராத பணவரவு வந்துசேரலாம்.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் இன்ப வாழ்வு உண்டாகும்.