நிதானமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!
முயற்சிகளில் உற்சாகத்துடன் பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடனும், கவனமுடனும் பொறுப்புகளில் ஈடுபடுவது அவசியம். பணம் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்கள் கணக்குகளில் கவனமாக இருப்பதுடன், கொடுக்கும் பொழுதும், வாங்கும் பொழுதும் சரிபாருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைச் சேர்ப்பதில் சிறு தடைகளைச் சந்தித்தாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள்.
கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை காணப்படும். கூட்டு மூலதனத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். பண வரவுகள் இருந்தாலும் செலவும் அதிகமாகும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் திருப்பம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் இருந்தாலும் வருமானம் தாமதமாகும். பங்குச்சந்தை சுமாரான லாபம் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.