பேச்சிலும், எழுத்திலும் வல்லவரான மிதுன ராசி அன்பர்களே!
நண்பர்கள் உங்கள் செயல்களில் ஒத்துழைப்பு தந்து உதவிகரமாக இருக்கும் வாரம் இது. தாய் வழி உறவில் முக்கிய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பொருளுதவி செய்யும் நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பதிவேடுகளை தேவையான சமயத்தில் தேடி எடுக்க முடியாமல், அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். பணிச்சுமை அதிகரிக்கும் வேளையில், சக ஊழியர்களிடம் இருந்து உதவி கிடைக்காது. சொந்தத் தொழில் செய்பவர்கள் பணிகளில் கவனமாக இருந்தாலும், எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் செலவுகள் அதிகமாகி சிரமம் கொடுக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால், திட்டமிட்ட காரியங்களை முடிக்க இயலாது. சுபகாரியங்கள் தள்ளிப் போகலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.